ADDED : நவ 20, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மைக்குழுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடந்தது. திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 12 குழுக்களை சேர்ந்த தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மாநில பயிற்சியாளர்கள் மரியசூசை, தமிழ்செல்வன் பயிற்சி அளித்தனர். பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுத்தல், அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர வழிகாட்டுதல், அனைத்து மாணவர்களுக்கும் அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் கிடைக்க செய்தல் குறித்து அறிவுறுத்தப் பட்டது.
ஒருங்கிணைந்த கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேவியர் கலந்து கொண்டனர்.

