தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருணை காட்டுங்க சார்: சிறு நகரங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்

கருணை காட்டுங்க சார்: சிறு நகரங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்

கருணை காட்டுங்க சார்: சிறு நகரங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்


ADDED : பிப் 18, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியோடு: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட அவசர நிலை மாறிய பின்னரும் பல ரயில்கள் இன்னமும் சிறுநகரங்களில் நிற்காமல் செல்வதால் பயணிகள் அதிக சிரமப்படுகின்றனர்.

மாவட்டத்தில் அய்யலுார், வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, பாளையம், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, அக்கரைப்பட்டி, சத்திரப்பட்டி, புஷ்பத்துார் என பல கிராமங்கள், சிறுநகரங்களில் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் கொரோனா பிரச்னை ஏற்படும் முன்னர் பல ரயில்களும் நின்று சென்றதால் மக்கள் பயன்பெற்றனர். கொரோனாவால் சில மாதங்கள் தொடர்ச்சியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இயல்பு நிலை திரும்பிய பின்னர் சிறப்பு விரைவு ரயில் என்ற பெயரில் புதிய எண்களில் ஒவ்வொன்றாக இயங்கப்பட்டன. ஆனால் ரயில்வே நிர்வாகம் நகரங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் நிறுத்தங்கள் அமைத்து இயக்கி வருகிறது. ஈரோடு- செங்கோட்டை, கோயம்புத்துார்- நாகர்கோவில், பாலக்காடு திருச்செந்துார், விழுப்புரம் திண்டுக்கல், மயிலாடுதுறை செங்கோட்டை போன்ற ரயில்கள் தற்போது முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பல ஊர்களை விட்டு நகரங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகின்றன. இதனால் எரியோடு, பாளையம், அய்யலுார் போன்ற பேரூராட்சி பகுதியினர் தங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தும் ஏற்கனவே நின்று சென்ற ரயிலை பயன்படுத்த திண்டுக்கல் செல்ல வேண்டியுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு 20 நிமிடம் நடக்க வேண்டியுள்ளது. திண்டுக்கல்லில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் இடையே பயணிக்க ஆட்டோவிற்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற நேரம், பணம் விரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது. இதை கருதி சிறுநகரங்களிலும் முன்பு நின்று சென்றது போல் தற்போதும் ரயில்கள் நின்றுசெல்ல ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.

..........................

-நடவடிக்கை எடுக்கலாமே

கொரோனா பிரச்னை ஏற்படும் முன்னர் எரியோடு, பாளையம் ரயில்வே ஸ்டேங்களில் திருநெல்வேலி ஈரோடு, நாகர்கோவில் கோயம்புத்துார் என இரு ரயில்கள் பகல் நேரத்தில் நின்று சென்றன. பாளையத்தில் கூடுதலாக இரவு நேரத்திலும் பாலக்காடு சென்னை விரைவு ரயிலும் நின்று சென்றது. தற்போது வெள்ளியணை, பாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் பெயரளவில் ஒரு சில ரயில் மட்டும் நிற்கிறது. சிறிது வித்தியாசமாக எரியோட்டில் நாகர்கோவில் கோயம்புத்துார் ரயில் , ஈரோடு செங்கோட்டை ரயில் மட்டும் நின்று செல்கிறது. இதிலும் ஈரோடு செங்கோட்டை ரயில் செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் போது நிற்பதில்லை. இதனால் எரியோடு பயணிகள் திண்டுக்கல் ஸ்டேஷனில் இறங்கி பஸ்சில் வரும் நிலை உள்ளது . எரியோடு போன்ற முக்கிய ஊர்களில் ஏற்கனவே நின்று சென்ற ரயில்கள் மீண்டும் நிற்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.கருப்புசாமி, மாவட்ட தலைவர், அம்பலகாரர் முன்னேற்ற சங்கம், எரியோடு.

...........................

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us