/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொரோனாவுக்கு பின் ஸ்டேஷன்களில் நிற்காத ரயில்கள்; மீண்டும் நின்று செல்ல தேவை நடவடிக்கை
/
கொரோனாவுக்கு பின் ஸ்டேஷன்களில் நிற்காத ரயில்கள்; மீண்டும் நின்று செல்ல தேவை நடவடிக்கை
கொரோனாவுக்கு பின் ஸ்டேஷன்களில் நிற்காத ரயில்கள்; மீண்டும் நின்று செல்ல தேவை நடவடிக்கை
கொரோனாவுக்கு பின் ஸ்டேஷன்களில் நிற்காத ரயில்கள்; மீண்டும் நின்று செல்ல தேவை நடவடிக்கை
ADDED : ஜன 08, 2024 05:15 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலுார், வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, பாளையம், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, அக்கரைப்பட்டி, சத்திரப்பட்டி, புஷ்பத்துார் என பல கிராமங்கள், சிறுநகரங்களில் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.
இவற்றில் கொரோனா பிரச்னை ஏற்படும் முன் அனைத்து பயணிகள் ரயில்களும் நின்று சென்றன. கொரோனா தொற்று பிரச்னை ஏற்பட்டதும் சில மாதங்கள் தொடர்ச்சியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இயல்பு நிலை திரும்பிய பின் சிறப்பு கட்டண விரைவு ரயில் என்ற பெயரில் புதிய எண்களில் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டது.
ரயில்வே நிர்வாகம் நகரங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் நிறுத்தங்கள் அமைத்து இயக்கி வருகிறது.
ஈரோடு திருநெல்வேலி, கோயம்புத்துார் நாகர்கோவில், பாலக்காடு திருச்செந்துார், விழுப்புரம் மதுரை, மயிலாடுதுறை செங்கோட்டை போன்ற பயணிகள் ரயில்கள் தற்போது எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பல ஊர்களை புறம்தள்ளி விட்டு நகரங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகின்றன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலுார், எரியோடு போன்ற பேரூராட்சி பகுதியினர் தங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தும், தங்கள் ஊரில் ஏற்கனவே நின்று சென்ற ரயில் சேவையை பயன்படுத்த திண்டுக்கல் நகருக்கு நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு 25 நிமிடங்கள் நடக்க வேண்டியுள்ளது. அல்லது ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற நேரம், பணம் விரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே சிறுநகரங்களுக்கு கிடைக்க வேண்டிய ரயில் போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும்.