ADDED : பிப் 19, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் நேற்று 2வது நாளாக மானாமதுரையில் புறப்பட்டது. இந்த ரயில் இரவு திண்டுக்கல் வழியாக சென்றது.
இதில் மானாமதுரை 58பேர், மதுரை 305, திண்டுக்கல் 83, திருச்சி 355, காட்பாடி 230 என மொத்தம் 1,031 பயணிகள் அயோத்தி சென்றனர்.
இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பயணம் செய்ய வருபவர்களுக்கு அடையாள அட்டை, இரவு உணவு ஆகியவற்றை வழங்க ரயில்வே நிர்வாகம் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டது. 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

