/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருவூலம், கணக்குத்துறை மாதாந்திர கூட்டம்
/
கருவூலம், கணக்குத்துறை மாதாந்திர கூட்டம்
ADDED : டிச 11, 2024 04:48 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருவூலம், கணக்குத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்டக் கருவூல அலுவலர் ராசு முன்னிலை வகித்தனர். கலெக்டர் பூங்கொடி பேசியதாவது: தமிழக அரசில் பணிபுரிந்து வரும்,ஓய்வு பெற்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஊதியம்,ஓய்வூதிய பலன்கள் கருவூலக் கணக்குத்துறை மூலமாக ஒருங்கிணைந்த நிதி,மனித வள மேலாண்மை திட்டம் வழியாக உரிய நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய கருத்துரு இணைய வழியில் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்புவது, வருமானவரிச் சட்டம் 1961-இன் படி உரிய காலக்கெடுவுக்குள் 24Q, 26Q மற்றும் 27Q தொடர்பான விவரங்களை விரைந்து பதிவேற்றம் செய்திட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடியும். ஓய்வுபெறும் அரசு பணியாளர்கள் ஓய்வூதிய கருத்துரு இணைய வழியில் அனுப்பும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.