/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் காற்றுடன் மழை சுற்றுலா பஸ் மீது விழுந்தது மரம்
/
கொடைக்கானலில் காற்றுடன் மழை சுற்றுலா பஸ் மீது விழுந்தது மரம்
கொடைக்கானலில் காற்றுடன் மழை சுற்றுலா பஸ் மீது விழுந்தது மரம்
கொடைக்கானலில் காற்றுடன் மழை சுற்றுலா பஸ் மீது விழுந்தது மரம்
ADDED : டிச 05, 2024 06:18 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்றுமுன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்த நிலையில் கேரள சுற்றுலா பஸ் மீது ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.
கொடைக்கானலில் நேற்று முன்தினம் விடிய விடிய காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் கேரள பயணிகளுடன் சுற்றுலா வந்த பஸ் பியர்சோலை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்தது. மேடான பகுதியிலிருந்த ராட்சத மரம் பஸ் மீது விழுந்தது. பயணிகள் இல்லாத நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதனிடையே நேற்று காலை அடர் பனிமூட்டத்துடன் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.இது நேற்று காலை 10:00 மணிவரை நீடித்தது. இதனால் பலரும் அவதியடைந்தனர். மாலையில் தெளிவான வானிலை நீடித்தது.