UPDATED : அக் 31, 2026 09:38 PM
ADDED : அக் 31, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு நாகல் நகர் மேம்பாலம் கீழ் பகுதி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது. துாய்மை பேணும் பொருட்டு மாநகராட்சி, வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியை பசுமைப் பகுதியாக அறிவித்து மரக்கன்று நடும் பணி நடந்தது. கமிஷனர் பிரேம்ஆனந்த், ஆர்.டி.ஓ., பழனிவேல், மாநகர் நல அலுவலர் முருகானந்தம், சுகாதார இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் பங்கேற்று 500 மரக்கன்றுகள் நட்டனர்.
மேலும் பொது சுகாதார பணியாக 12வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் குப்பையை நான்கு விதமாக தரம் பிரித்து வழங்க குப்பைக் கூடைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் செல்வராணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
