ADDED : நவ 27, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் மெட்ரோ லைன்ஸ் சங்கம், வேடசந்துார் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கலெக்டரின் 5 லட்சம் மரக்கன்று நடும் இலட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக, வேடசந்துார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதாம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மெட்ரோ லைன் சங்க தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய கவுரவத் தலைவர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். நிர்வாகிகள் முருகன், ரவிவர்மா, சந்திரசேகரன், ராமதாஸ், மகேஸ்வரன், முத்தன், ராஜா பங்கேற்றனர்.

