தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்டத்தை பசுமையாக்க காத்திருக்கும் மரக்கன்றுகள்

மாவட்டத்தை பசுமையாக்க காத்திருக்கும் மரக்கன்றுகள்

மாவட்டத்தை பசுமையாக்க காத்திருக்கும் மரக்கன்றுகள்


UPDATED : செப் 26, 2026 09:19 PM

ADDED : செப் 26, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 09:19 PM ADDED : செப் 26, 2026 09:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில் ஊராட்சி வாரியாக 5 முதல் 10 ஆயிரம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை நடவு செய்ய மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தின் வடக்கு பகுதியில் பெரும்பாலான ஊராட்சிகள் வறட்சி பாதித்த பகுதிகளாக உள்ளன.

மாவட்டம் முழுவதும் பசுமையை உருவாக்கும் நோக்கில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊராட்சிகள் வாரியாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான மரக்கன்றுகள் தடுப்பு அமைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆடிப்பட்டத்தின் போது போதிய மழை பெய்திருந்தால் இம்மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருக்கும். அப்போது மழையே இல்லாத நிலையில் விதைப்பு பணிகள் எவ்வாறு நடக்கவில்லையோ அதேபோல் ஊராட்சி வாரியாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும் நடக்கவில்லை.

இந்த மரக்கன்றுகளை 125 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் விட்டு முறையாக பராமரித்து வருகின்றனர். தற்போது வேம்பு, புங்கை, புளி, பூவரசு, தேக்கு, கொடிக்காப்புளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் 5 முதல் 7 அடி வரை நன்கு செழித்து வளர்ந்துள்ளன.

வரும் அக்டோபர், நவம்பரில் தொடர்மழை பெய்யும் நேரத்தில் இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இன்னும் இருமாதங்களுக்குள் இந்த மரக்கன்றுகள் முழுவதும் நடப்பட்டு பராமரிக்கப்படும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us