/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு பணிகளுக்காக வெட்டிய மரங்களை மீண்டும் நடவு செய்யலாமே! கவனம் செலுத்தலாமே நெடுஞ்சாலைத்துறையினர்

ADDED : மே 01, 2024 07:26 AM

மாவட்டம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் பரவலாக விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் நிலை இருந்தது. பைபாஸ் ரோட்டோரங்ளில் பல ஆண்டுகளுக்கு முன் ஏராளமான மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தது.
அவ்வழியாக வெளியூருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வெயில் நேரங்களில் அதன் அருகில் நின்று ஓய்வெடுப்பார்கள். பறவைகள்,விலங்குகள் மரங்களில் வாழ்ந்து சுத்தமான காற்றும் உருவாகும் நிலை இருந்தது. இதனிடையே பைபாஸ் ரோடுகளை விரிவுப்படுத்தும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரங்களில் நின்ற மரங்களை வெட்டியது.
சமூக ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நடவு செய்ய நீதிமன்றத்தில் மனு செய்தனர். நீதிமன்றமும் அந்தந்த இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு உத்தரவிட்டது. மரங்களை வெட்டிய பகுதிகளில் புதிதாக மரக்கன்றுகளை யாரும் நடுவதற்கு முன்வரவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் பைபாஸ் ரோடுகளில் செல்லும் போது ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவிக்கின்றனர். கண்ணுக்கெட்டிய துாரம் வரை மரங்கள் எதுவும் இல்லாமலிருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரோடு விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் புதிதாக மரக்கன்றுகளை நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.