/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுநீரால் அவதி... சிதிலமடைந்த மின்கம்பம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
கழிவுநீரால் அவதி... சிதிலமடைந்த மின்கம்பம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கழிவுநீரால் அவதி... சிதிலமடைந்த மின்கம்பம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கழிவுநீரால் அவதி... சிதிலமடைந்த மின்கம்பம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : மே 20, 2025 01:16 AM

திண்டுக்கல்: கழிவுநீரால் அவதி, சிதிலமடைந்த மின்கம்பம், ரோட்டை சீரமையுங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பலரும் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 222 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள அரசன்நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் அரசன்நகர் குடியிருப்பு பகுதியில் 10 நாட்களுக்கும் மேல் பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்பதோடு துர்நாற்றமும் வீசுகிறது. தெருவில் தேங்கி நிற்க்கும் கழிவுநீர் ஒருகட்டத்தில் வீடுகளுக்குள்ளும் புகுந்துவிடுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டிருந்தனர்.
வேடசந்துார் மல்வார்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வடமதுரையை அடுத்த பி.கம்பளியம்பட்டியை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் கொடுத்த மனு வில், எங்கள் பகுதியை சேர்ந்த சிலர், நான் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணம், நகைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாக வாங்கி வைத்துக்கொண்டு திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். கொடைக்கானலை அடுத்த குண்டுப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், குண்டுப்பட்டியில் இருந்து பூம்பாறை வரை அமைக்கப்பட்ட தார்ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ரோட்டை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.