/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
திண்டுக்கல்லில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 05, 2025 05:14 AM

திண்டுக்கல்: மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமென கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மகேஸ்வரன், சிவன்கருப்பன், வெங்கடேஷ், சந்தோஷ், ஒன்றிய செயலாளர் கிளமெண்ட், நகரச் செயலாளர் ஆசாருதீன், மகளிர் அணி வஹிதா பானு கலந்துகொண்டனர்.
நத்தம்: பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட இணை செயலாளர் சந்தோஷ், பொருளாளர் கலைச்செல்வன், துணை செயலாளர்கள் சிலம்பரசன், வகிதாபானு, இளைஞரணி அமைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் அருள்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் வீரராஜ், பெருமாள், தமிழ்ச்செல்வன், மணிகுமார் கலந்து கொண்டனர்.
பழநி: ஆர்.எப். ரோட்டில் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் மிதுன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.