/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் மீது லாரி மோதல்; மாணவர்கள் 3 பேர் பலி
/
டூவீலர் மீது லாரி மோதல்; மாணவர்கள் 3 பேர் பலி
ADDED : அக் 06, 2024 11:21 PM

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கண்டெய்னர் லாரி டூவீலர் மோதியதில் கல்லுாரி மாணவர்கள் 3 பேர் பலியாயினர்.
நத்தம் அசோக்நகரை சேர்ந்த கல்லுாரி மாணவர் தினகரன் 20. நண்பர்களான கல்லுாரி மாணவர்கள் பாலாஜி 19,பிரவீன் 18, ஆகியோருடன் டூவீலரில் திண்டுக்கல் சென்று நேற்று காலை ஊருக்கு திரும்பினர். 10:35 மணிக்கு கணவாய்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் 3 பேரும் துாக்கி வீசப்பட்டனர். பாலாஜி,பிரவீன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த தினகரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சாணார்பட்டி எஸ்.ஐ., பொன்குணசேகர் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.