/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிரைவரை தாக்கி லாரி கடத்தல்: 4 பேர் கைது
/
டிரைவரை தாக்கி லாரி கடத்தல்: 4 பேர் கைது
ADDED : அக் 13, 2024 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் அருகே டிப்பர் லாரி டிரைவரை தாக்கி லாரியை கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி சத்திரப்பட்டியை சேர்ந்தவர் டிப்பர் லாரி டிரைவர் ஜோதிமணி 35. லாரியில் கிரஷர் மண்ணை ஏற்றிக்கொண்டு சுக்காம்பட்டி நால்ரோட்டில் இருந்து சேடபட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் லாரியை வழிமறித்து ஜோதிமணியை தாக்கி லாரியை கடத்தில் சென்றனர். வேடசந்துார் போலீசார் லாரியை மீட்டு டிரைவரை தாக்கிய சேடபட்டியை சேர்ந்த கவுஸ்பாண்டி 27, சதீஷ் 23 , ரமேஷ் 20, 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்தனர்.