/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டி.வி.ஆர்., உருவ நாணயம் வெளியிட கோரி நாணய வடிவில் ஓவியம் தீட்டிய பழநி ஆசிரியர்

ADDED : அக் 02, 2024 07:30 AM

பழநி : தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் டி.வி.ஆர்., உருவ நாணயம் வெளியிட கோரி நாணய வடிவில் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார் திண்டுக்கல் மாவட்டம் பழநி சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன்.
இவர் ஆண்டுதோறும் டி.வி.ஆர்., பிறந்தநாளில் அவரது உருவப்படத்தை வித்தியாசமாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு டி.வி.ஆர்., உருவப்படத்துடன் கூடிய நாணயம் வெளியிட மத்திய அரசைக்கோரி நாணய வடிவில் உருவப் படத்தை வரைந்து உள்ளார்.
அன்புச்செல்வன் கூறுகையில், இந்த ஓவியத்தை இரண்டு அடி அகலம் 3 அடி உயரத்தில் ஆயில் பெயின்ட், வண்ண பென்சில்கள், மார்க்கர்கள் பயன்படுத்தி 20 மணி நேரத்தில் வரைந்தேன். ஓவியத்தின் தலைப்பில் கருப்பு மையினால் தினமலர் என தமிழில் எழுதி உள்ளேன்.
தமிழகத்துடன் கன்னியாகுமரியை இணைக்கவும், ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செயல்பட்ட சில விஷயங்களால் நான் டி.வி.ஆர்., ஆல் ஈர்க்கப்பட்டேன். அதற்கு ஏற்றார் போல் 2021ல் தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளேன். டி.வி.ஆர்., தபால் தலை வெளியிட்டது போல் நாணயம் வெளியிட்டு அவரை மத்திய அரசு கவுரவிக்க வேண்டும் என்றார்.