/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவான இருவர் கைது
/
வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவான இருவர் கைது
ADDED : நவ 20, 2024 02:34 AM
நத்தம்:- கொள்ளை, போக்சோ வழக்குகளில் நத்தம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் காஜாமைதீன். 2015 ல் இவரது வீட்டில் இருந்தவர்களை கட்டிப் போட்டு 57 பவுன் நகை கொள்ளை போனது.
இதில் தஞ்சாவூர்- குருவார்பட்டியை சேர்ந்த மதியழகன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார். அவ்வப்போது வழக்கில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இரு ஆண்டுகளாக மதியழகன் ஆஜராகவில்லை. இதனால் இவருக்கு நத்தம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
மற்றொரு வழக்கு
செந்துறை கக்கன் காலனியை சேர்ந்த ராகுல் 2019ல் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோவில் கைதானார். ஜாமினில் வந்தவர் இதன் வழக்கில் 6 ஆண்டுகளாக ஆஜராகவில்லை.
இதனால் ராகுலுக்கும் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார் இருவரையும் தேடினர். தஞ்சாவூரில் பதுங்கி இருந்த மதியழகன், கேரளாவில் பதுங்கி இருந்த ராகுலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.