UPDATED : அக் 24, 2026 09:11 PM
ADDED : அக் 24, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரபட்டி: பழநி மானுார் பைபாஸ் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட தாலுகா போலீசார் அவ்வழியாக காரில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் திண்டுக்கல் மேட்டுப்பட்டி பேகம்பூரை சேர்ந்த சுனில்சூர்யா 21, குளிப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் 29, என்பதும் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
