UPDATED : அக் 24, 2026 08:59 PM
ADDED : அக் 24, 2026 08:56 PM
வடமதுரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த டிரைவர் திருப்பதி 24, மினி சரக்கு வேனை மணப்பாறையில் இருந்து மதுரைக்கு ஓட்டிச்சென்றார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது அய்யலுாரில் இருந்து மில் தொழிலாளர்களுடன் சீரங்ககவுண்டனுார் முருக அய்யப்பன் 32, ஓட்டி வந்த வேன் பக்கவாட்டில் மோதியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், மில் வேன் மீது மோதியது. விபத்தில் மில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர்கள் திருப்பதி, முருக அய்யப்பன், இரு வேன்களிலும் பயணித்த கோயம்புத்துார் சவுரியார்பாளையம் தமிழ்வாணன் 37, அய்யலுார் பாப்பா 41, நந்தினி 20, முத்துலட்சுமி 46, சின்னம்மாள் 35, சந்திரா 36, வினிதா 31, கவிதா 29, உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
