/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதைக்காளான் விற்பனை 'கொடை'யில் இருவர் கைது
/
போதைக்காளான் விற்பனை 'கொடை'யில் இருவர் கைது
ADDED : டிச 12, 2025 04:35 AM

திண்டுக்கல்: டிச.12-: -: கொடைக்கானல் அருகே சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதைக்காளான் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூம்பூர் சுற்றுப்பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள், வெளிமாநில நபர்கள், இளைஞர்களை குறிவைத்து போதைக்காளான் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.எஸ்.ஐ., சின்ன மந்தையன், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் பழநி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசுடன் இணைந்து கூம்பூர் பகுதியில் சோதனை நடத்தினர்.
அங்கு அப்பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 55, மனோகரன் 40 , ஆகியோர் போதைக்காளானை பாலிதீன் பையில் கட்டி வைத்து விற்பனை செய்ததை பார்த்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 60 கிராம் போதைக் காளான், அலைபேசியை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

