/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகனங்களை மறிக்கும் காட்டு யானைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
வாகனங்களை மறிக்கும் காட்டு யானைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வாகனங்களை மறிக்கும் காட்டு யானைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வாகனங்களை மறிக்கும் காட்டு யானைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 12, 2025 04:36 AM

தாண்டிக்குடி: திண்டுக்கல்மாவட்டம் தாண்டிக்குடி மலைப் பகுதியில் வாகனங்களை இடை மறிக்கும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் சில தினத்திற்கு முன் இரு காட்டு யானைகள் ரோட்டோரம் இருந்த பனை மரங்களை சாய்த்து வாகனங்களை மறித்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வனத்துறையினர் யானைகளை விரட்டி மரங்களை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது. நேற்று காலை பள்ளத்து கால்வாய் --பாச்சலுார் ரோட்டில் அரசு பஸ்சை காட்டு யானை ஒன்று பின் தொடர பஸ்சில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். சிறிது நேரத்தில் யானை அருகிலிருந்த தோட்டப்பகுதிகளுக்கு சென்றது.
காட்டு யானைகள் தாண்டிக்குடி மலைப்பகுதியில் முகாமிட்டு விவசாயபயிர்களை சேதப்படுத்துவதும், ரோட்டோரங்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதுமாக உள்ளது. இங்குள்ள காட்டு யானைகளை தரைப்பகுதிக்கு இடம் பெயர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.