/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியற்ற சூதாட்ட 'கிளப்'கள் தாராளம்; கட்டுபாட்டு நடவடிக்கை அவசியம்
/
அனுமதியற்ற சூதாட்ட 'கிளப்'கள் தாராளம்; கட்டுபாட்டு நடவடிக்கை அவசியம்
அனுமதியற்ற சூதாட்ட 'கிளப்'கள் தாராளம்; கட்டுபாட்டு நடவடிக்கை அவசியம்
அனுமதியற்ற சூதாட்ட 'கிளப்'கள் தாராளம்; கட்டுபாட்டு நடவடிக்கை அவசியம்
ADDED : டிச 12, 2025 06:01 AM

மாவட்டத்தில் மலையடிவாரம், தோட்டத்து சாலை, தோப்பு வீடுகள் உட்பட பல இடங்களில் மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உரிய அனுமதி பெறாதவையாக உள்ளன.
ஒவ்வொரு பகுதியை சுற்றிலும் அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் தனியார் பாதுகாவலர்களை நியமித்து மிகுந்த கண்காணிப்புடன் இவை செயல்படுகின்றன. தேசிய நெடுஞ் சாலைகளின் முக்கிய சந்திப்பு மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தற்போது தாராளமாகி வருகிறது.
இவற்றில் பெரும்பாலும் தடை செய்யப்பட்ட வெட்டுச்சீட்டு முறையிலான சூதாட்டமே முக்கிய இடம்பெறுகிறது. இதனை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் அலைபேசி குழுக்கள் மூலம் தகவல் தெரிவித்து அவ்வப்போது இடத்தை மாற்றி நடத்துகின்றனர். திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் சம்பந்தப்பட்ட இடங்களில் முகாமிட்டு நள்ளிரவு வரை சூதாட்டத்தில் ஈடுபடுவது தொடர்கிறது.
கொடைரோடு, சின்னாளப்பட்டி, பிள்ளையார்நத்தம், செம்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கன்னிவாடி, பழநி, வேடசந்துார் தாடிக்கொம்பு உட்பட பல இடங்களில் அவ்வப்போது பெயரளவில் போலீசார் 'ரெய்டு' நடத்தி அதிக எண்ணிக்கையிலான டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்வதும், சொற்ப நபர்களை கைது செய்வதாக கணக்கு காட்டி வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.
இது போன்ற நேரங்களில் உள்ளூர் போலீசாரை விட மாவட்ட தலைமையிடத்தில் இருந்து வரும் பிற சிறப்பு பிரிவு போலீசாரின் குழுக்களே பெரும்பாலும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கும் வழக்கம் வாடிக்கையாகி வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கந்துவட்டி கும்பலும் பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றன சூதாட்டங்களில் நடத்துபவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு மீட்டர், ரன், ராக்கெட், ஜெட் உள்ளிட்ட பெயர்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்களையும் ஈடாக பெறுவது தொடர்கிறது.அரசியல் பிரமுகர்கள் செல்வாக்கு, ஆதிக்கத்தால் இவை தாராளமாக நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்துவதில் போலீஸ், துறை இணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் தொய்வு தவிர்க்க வேண்டும். -

