/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது
/
முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது
முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது
முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்த 2 பேர் கைது
ADDED : டிச 23, 2024 04:48 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் டூவீலரில் சென்ற வாலிபரை மறித்து முகவரி விசாரிப்பது போல் நடித்து கழுத்தில் கத்தி வைத்து பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக் 41. நண்பரோடு நேற்று முன்தினம் டூவீலரில் வத்தலக்குண்டு பைபாஸ் பெரியபள்ளப்பட்டி பிரிவு அருகே சென்றனர். அப்போது யாரோ அழைப்பது போல் இருந்ததால் டூவீலரை நிறுத்தினர்.
அங்கு வந்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஷேக்பரித் 29, திண்டுக்கல் முருகபவனம் ஜஸ்டின்செல்வராஜ்22, இருவரும் முகவரி விசாரிப்பது போல் தீபக், அவரது நண்பரிடம் பேசி திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரின் கழுத்தில் வைத்து மிரட்டி ரூ.1000, அலைபேசியை பறித்து சென்றனர். டி.எஸ்.பி., சிபின்சாய் சவுந்தர்யன், தலைமையிலான தாலுகா போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஷேக்பரித், ஜஸ்டின்செல்வராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.