ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சிறப்பு எஸ்.ஐ., பெருமாள்சாமி, காவலர் சுரேஷ் ஆகியோர் குளத்துார் காளனம்பட்டி பிரிவு அருகே மதுவிலக்கு ரோந்து சென்றனர்.
காளனம்பட்டி நடராஜன் 50, என்பவரை கைது செய்து, இதேபோல் முனியபிள்ளைபட்டி நாடக மேடை அருகே ரோந்து சென்றனர். அப்போது முனியபிள்ளைபட்டி மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தாடிக்கொம்பு எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.