ADDED : பிப் 18, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஜே.ஜே., நகரில் வசிப்பவர் கவுதமி 33.
கணவர் பாலகருப்பையாவுடன் திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை நோக்கி டூவீலரில் வந்த போது காவேரி மில் ஸ்டாப் அருகில் மற்றொரு டூவீலரில் வந்த இருவர் கவுதமி அணிந்திருந்த 5 பவுன் நகை செயினை பறித்தனர்.
செயின் அறுந்ததால் 2.5 பவுன் நகையுடன் தப்பினர். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., நகர் வினோத்குமாரை 21 , கைது செய்த நிலையில் வடமதுரை ஓம்சக்தி கோயில் தெருவை சேர்ந்த வசந்தை 21, நேற்று கைது செய்தனர்.