/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரிவாளுடன் மிரட்டிய இருவர் கைது
/
அரிவாளுடன் மிரட்டிய இருவர் கைது
ADDED : ஆக 16, 2025 02:50 AM

வேடசந்துார்: வெள்ளையகவுண்டனுாரில் கடன் கொடுத்தவர்கள் அரிவாளை காட்டி மிரட்டல் விடும் காட்சி வைரல் ஆக கூம்பூர் போலீசார் இருவரை கைது செய்தனர்.
கூவக்காபட்டி வெள்ளையகவுண்டனுாரில் டீக்கடை நடத்தி வருபவர் பிரபு 40. இவரது மனைவி சந்திரா 35. இருவரும் டீக்கடையை நடத்தி வருகின்றனர். பிரபு வேலம்பட்டியை சேர்ந்த ராமசாமியிடம் ரூ .2 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். திரும்ப கொடுக்காத நிலையில் மணிகண்டன் , நண்பர்களான பெருமாள்கோவில்பட்டி தர்மன் 27, சின்னமுத்து 30, ஆகியோர் பிரபுவின் மனைவி சந்திராவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவாக இதன் வீடியோ வைரலானது. கூம்பூர் போலீசார், இருவரையும் கைது செய்தனர். சின்னமுத்துவை தேடி வருகின்றனர்.