sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வங்கதேசத்தினர் இருவர் திண்டுக்கல்லில் சிக்கினர்

/

 வங்கதேசத்தினர் இருவர் திண்டுக்கல்லில் சிக்கினர்

 வங்கதேசத்தினர் இருவர் திண்டுக்கல்லில் சிக்கினர்

 வங்கதேசத்தினர் இருவர் திண்டுக்கல்லில் சிக்கினர்


ADDED : ஜன 28, 2026 12:28 AM

Google News

ADDED : ஜன 28, 2026 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அடுத்த நாகம்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் வீட்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக வாடகைக்கு குடியிருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது அவர்கள் இருவரும், வங்கதேச தலைநகர் டாக்காவைச் சேர்ந்த மசூத் மியா 25, நாராயண்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முகமது அலமின் 30 என்பதும், கோட்டையூரில் உள்ள தனியார் ஆலையில் தையல்காரர்களாக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

ஒருவர் மேற்குவங்க எல்லை வழியாகவும், மற்றொருவர் கடல் வழியாகவும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் தங்கி இந்திய ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளனர். கடந்த 3 மாதங்களாக நாகம்பட்டியில் தங்கி இருந்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் மேல் விசாரணைக்காக வேடசந்துார் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us