ADDED : பிப் 29, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை, : நிலக்கோட்டை அருகே ஜல்லிபட்டியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமலிங்கம்.
திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் விஜய் 24, கலைஞர் 25, இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் மிரட்டிய நிலையில் போலீசில் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். இந்த நிலையில் இரவில் முத்துராமலிங்கம் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. தனிப்படை போலீசார் விஜய் 24, கலைஞர் 25, இருவரையும் கைது செய்தனர்.

