ADDED : டிச 26, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ஆந்திரா மாநிலம் தடாவை சேர்ந்தவர் ஜெகதீஷ் 35. இவர் தன் நண்பர்கள் மூன்று பேருடன் கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு சென்றனர்.
சுவாமி தரினசத்தை முடித்து அங்கிருந்து புறப்பட்டவர்கள் பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வேடசந்துார் வழியாக திருச்சி நோக்கி சென்றனர். அப்போது வேடசந்துார் வடமதுரை திருச்சி ரோட்டில் தனியார் மண்டபம் அருகே கார் வந்தபோது காரின் வலது புற முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் சென்ற பிச்சைமுத்து70,என்பவர் மீது மோதி அவருக்கு இரு கால்களும் முறிந்தது. அருகில் நடந்து சென்ற பெரியக்காள்80,மீதும் மோதி அவரும் காயமடைந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.