UPDATED : ஆக 29, 2026 11:04 PM
ADDED : ஆக 29, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி:தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் டூவீலரில் சென்ற இருவர் காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.
பண்ணைக்காட்டை சேர்ந்த கேசவன் 40, சிவக்குமார் 39, டூவீலரில் தாண்டிக்குடிக்கு சென்றனர். மருதாநதி பள்ளதாக்கு அருகே வந்த போது அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இருவரும் தாண்டிக்குடி மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பெரும்பள்ளம் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த ரோட்டில் காட்டுயானை நடமாட்டத்தால் அச்சுறுத்தல் உள்ள சூழலில் தற்போது காட்டுமாடு தாக்கியது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
