/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துாரில் ரோட்டோர தடுப்பில் கார் மோதி இருவர் பலி
/
வேடசந்துாரில் ரோட்டோர தடுப்பில் கார் மோதி இருவர் பலி
வேடசந்துாரில் ரோட்டோர தடுப்பில் கார் மோதி இருவர் பலி
வேடசந்துாரில் ரோட்டோர தடுப்பில் கார் மோதி இருவர் பலி
ADDED : ஆக 12, 2025 03:39 AM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே ரோட்டோர தடுப்பு கற்களில் கார் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி போலமடுவு கிராமத்தை சேர்ந்தவர் கார் டிரைவர் கதிர்வேல் 32. இவரது காரில் தர்மபுரி வெள்ளக்கல்லை சேர்ந்த இளநீர் வியாபாரி சேட் 60, பெண்ணாகரம் காளியப்பன் 51, அவரது மனைவி ேஷாபனா 45, வெள்ளக்கல் லட்சுமணன் 42, அவரது மனைவி அன்னக்கிளி 27, பூமி அரசு, முனுசாமி, குழந்தைகள் பிரியதர்ஷினி, லோகேஷ் என 10 பேர் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றனர். திண்டுக்கல் வழியாக தர்மபுரி சென்றனர். வேடசந்துார் கரூர் நான்குவழிச்சாலை கல்வார்பட்டி அருகே நேற்று அதிகாலை 2:30 மணிக்கு சென்ற போது டிரைவர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பு கற்களில் மோதி மூன்று முறை உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் வந்த 10 பேரும் காயமடைந்தனர். சேட், ஷோபனா உயிரிழந்தனர். மற்றவர்கள் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

