ADDED : மார் 01, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே தனியார் பஸ் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலியாகினார்.
நத்தம் அருகே காட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் சந்திரகுமார் 35. அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் 27. இருவரும் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி சென்றனர். குட்டூர் பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதினர். இருவரும் உடல் சிதறி பலியாகினர்.
நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார். சந்திரகுமாருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். செந்தில்நாதனுக்கு திருமணம் ஆகவில்லை.

