/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை, பழநி ரயில் விபத்தில் இருவர் பலி
/
வடமதுரை, பழநி ரயில் விபத்தில் இருவர் பலி
ADDED : நவ 05, 2024 05:43 AM
வடமதுரை: பழநி, தாமரைப்பாடி பகுதியில் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவரும்,ரயில் மோதியதில் ஒருவர் என இருவர் பலியாகினர் .
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் 22. திருச்சி தனியார் நிறுவனத்தில் ஏ.சி., மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றுமுன்தினம் மாலை பயணித்தார்.
படிக்கட்டில் பயணித்த நிலையில் தாமரைப்பாடி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தவறி விழுந்து இறந்தார்.
நேற்று காலை அப்பகுதி மக்கள் பார்த்த பின்னரே பயணி இறந்த தகவல் தெரிய திண்டுக்கல் ரயில்வே எஸ்.ஐ., அருணோதயம் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
* பழநி கரடிகூட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் 53. இவர் கொழுமம்கொண்டான் பகுதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று காலை நாகூர் பிரிவு அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியே வந்த பாலக்காடு- திருச்செந்தூர் ரயில் மோதி இறந்தார். பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.