ADDED : நவ 12, 2024 05:31 AM
வேடசந்துார்: வேடசந்துார், நத்தம் பகுதியில் நடந்த இரு வேறு விபத்துக்களில் இருவர் பலியாகினர்.
வேடசந்துார் நகரின் மையப் பகுதியில் குடகனாறு செல்கிறது. இங்கு இரட்டை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பெருமாள்கவுண்டன்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த முனியப்பன் 50, உட்கார்ந்திருந்தார். அப்போது குடகனாற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம்: - சிவகங்கை மாவட்டம் குன்னத்துாரை சேர்ந்தவர் தொழிலாளி சந்தியாகு 44. இவர் தனது டூவீலரில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு செல்ல மெய்யம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரோடு பள்ளத்தில் சிக்கி தவறி விழுந்தார். நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.