/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மாணவி உட்பட இருவருக்கு டெங்கு: வீடு, பள்ளியில் தடுப்பு நடவடிக்கை
/
திண்டுக்கல்லில் மாணவி உட்பட இருவருக்கு டெங்கு: வீடு, பள்ளியில் தடுப்பு நடவடிக்கை
திண்டுக்கல்லில் மாணவி உட்பட இருவருக்கு டெங்கு: வீடு, பள்ளியில் தடுப்பு நடவடிக்கை
திண்டுக்கல்லில் மாணவி உட்பட இருவருக்கு டெங்கு: வீடு, பள்ளியில் தடுப்பு நடவடிக்கை
ADDED : நவ 21, 2024 04:56 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 13 வயது பள்ளி மாணவி உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளி, வீடு உள்ளிட்ட பகுதியில் கொசு மருந்து அடித்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதனால் வீடுகள், சிமென்ட் சிலாப்புகள், ரோட்டோரங்கள், உபயோகமில்லாத வாகன டயர்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களை பரப்பும் 'ஏடிஸ்'கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதை தடுக்கும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மாயமானதோடு கொசு மருந்து அடிப்பவர்களும் தங்கள் பணியில் சுணக்கம் காட்ட டெங்கு காய்ச்சலின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
அக்டோபர் முதல் ஒருசிலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதியாகினர்.
அவர்களுக்கென தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஏராளமானோர் உடல்நலம் சரியில்லாமல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர்.
அதில் ஆத்துார் பெரும்பாறை பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதை தொடர்ந்து இருவரும் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையறிந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தபட்ட மாணவியின் இருப்பிடத்தை கண்டறிந்து அப்பகுதி முழுவதும் கொசு மருந்து அடிப்பது,நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாணவியின் பள்ளிக்கும் சென்று கொசு மருந்து அடித்து அவரது வகுப்பு மாணவர்களையும் பரிசோதனை செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்குவால் 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.