ADDED : செப் 02, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் குஞ்சனம்பட்டியில் டூவீலர் மீது கார் மோதியதில் இருவர் பலியாயினர்.
தர்மத்துப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகானந்தம் 55. டூ வீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) திண்டுக்கல் சென்று விட்டு முத்தனம்பட்டி வழியே திரும்பி வந்து கொண்டிருந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த லோடுமேன் முருகன் 52, வந்தார்.
குஞ்சனம்பட்டி அருகே எதிரே வந்த கார் டூவீலரில் மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலியாயினர். கார் ரோட்டில் கவிழ்ந்தது. கார் டிரைவர் தர்மத்துப்பட்டி கோகுல் 36, அவருடன் வந்த சுரக்காபட்டி முத்துப்பாண்டி 35, காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.