ADDED : மார் 21, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:நத்தத்தில் வாலிபர் ஓட்டி வந்த டூவீலர நடுரோட்டில் தீ பற்றி எரிந்தது.
நத்தம் அருகே உலுப்பகுடியை சேர்ந்தவர் ரஞ்சித் 26. இவர் நேற்று மதியம் தனது டூவீலரில் நத்தம்- கோவில்பட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சேர்வீடு விலக்கு பகுதியில் வந்த போது இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சுதாரித்த ரஞ்சித் டூவீலரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கினார். டூவீலர் தீப்பிடித்து எரிந்தது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். டூவீலர் முழுவதும் எரிந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.