/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் - கார் மோதல்: இருவர் பலி
/
டூவீலர் - கார் மோதல்: இருவர் பலி
ADDED : பிப் 05, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நான்கு வழிச்சாலையில் நரிகல்பட்டியிலிருந்து வந்த டூ வீலர் மீது கார் மோதியதில் வாலிபர்கள் இருவர் பலியாகினர்.
பழநி நரிக்கல்பட்டியை சேர்ந்த சங்கர் 31, மகேஷ் 31. இருவரும் நேற்றிரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) பழநி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்றனர். அவர்களின் பின்னால் கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி அதி வேகத்தில் வந்த சொகுசு கார், லாரியை கோதைமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே முந்த முயன்ற போது டூவீலரில் மோதியது.
இதில் சங்கர், மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.