sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டோரங்களில் நிறுத்தும் டூவீலர்களால் இடையூறு...

/

ரோட்டோரங்களில் நிறுத்தும் டூவீலர்களால் இடையூறு...

ரோட்டோரங்களில் நிறுத்தும் டூவீலர்களால் இடையூறு...

ரோட்டோரங்களில் நிறுத்தும் டூவீலர்களால் இடையூறு...


ADDED : ஜன 13, 2025 04:11 AM

Google News

ADDED : ஜன 13, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர்களால் இடையூறு : வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. பஸ் ரேக்கில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். --கோபி,வத்தலக்குண்டு.---------

சேதமான மின்கம்பம் : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். புதுக்கோட்டை ஊராட்சி மாதா நகர் அருகே உள்ள மின்கம்பம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. முறிந்து விழுவதற்குள் மின்கம்பத்தை மாற்ற மின் வாரியம் முன் வர வேண்டும். --

-ப.இளவரசன், குஜிலியம்பாறை.

--------

தொற்று பரப்பும் கழிவுநீர் : பழநி திண்டுக்கல் ரோடு வி.வி.ஆர். செல்வ மஹால் பின்புறம் வசந்தம் நகர் குடியிறுப்பு பகுதியில் ஒரு மாதமாக சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவுகிறது. சாக்கடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேஷ், பழநி.----------

குண்டும் குழியுமான ரோடு : அம்மையாநாயக்கனுாரில் அரசு பள்ளி,மின்வாரியம் செல்லும் ரோடு குண்டு குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோடை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், அம்மையாநாயக்கனுார்.---------

கழிவுகளால் ஆபத்து : லெக்கையன் கோட்டை பொள்ளாச்சி புதிய பைபாஸ் ரோட்டில் கொல்லப்பட்டி குளம் அருகே வேடசந்துார் செல்லும் சர்வீஸ் ரோட்டில் ஓட்டல் கழிவுகள்,இறைச்சி கழிவுகளை கொட்டப்படுகிறது. இதை கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், ஒட்டன்சத்திரம்.----------

தடுப்பில்லாத ரோடுகள் : எரியோடு திண்டுக்கல் இடையே குளத்துார் சந்தனவர்த்தினி பழைய ஆற்றுப்பாலத்தையொட்டி ரோடு விரிவாக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதி தடுப்பில்லாமல் விபத்து ஆபத்துடன் உள்ளது. பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். --

-மருதக்குமார், வடமதுரை.-----------

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் : பழநி திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ்ஸ்டாப் அருகே மின்சார கம்பிகள் மீது மரங்கள் உரசுகின்றன. இதனால் அடிக்கடி இப்பகுதியில் மின் தடை ஏற்படுகிறது. மின்சார கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், பழநி.--------






      Dinamalar
      Follow us