ADDED : ஜன 14, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி; பழநி ஆயக்குடி அருகே கணக்கன்பட்டியில் உச்சி மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்திருந்தினார். கோயில் முன்பு ஆடு,கோழி பலி கொடுத்து வழிபட்டனர். கணக்கன்பட்டி கிராம வீதிகளில் அம்மன் உலா வந்தது. அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.