ADDED : நவ 28, 2024 06:20 AM

திண்டுக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாநகர தி.மு.க., சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் , மருத்துவ முகாம், கண் பரிசோதனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தின. மாவட்ட மருத்துவர் அணி சார்பில் நடந்த ரத்ததானம் , கண் பரிசோதனை முகாமுக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அமிர்தகடேஸ்வரர் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியசாமி துவங்கி வைத்தார். தொடர்ந்து மதுரை ரோட்டில் நடந்த ரத்தப் பரிசோதனை முகாமிலும் பங்கேற்றார். அதே பகுதியில் உள்ள டி.பி.கே.என்., மெட்ரிக் பள்ளி சிறுவர்கள் 800 பேருக்கு இலவச உணவு பெட்டகம் , சத்து உருண்டை வழங்கினார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
மாநகர செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா, மேயர் இளமதி, மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மாநகரக் துணை செயலாளர்கள் அழகர்சாமி, முகமது சித்திக், பொருளாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் சந்திரசேகரன், ஜானகிராமன், பஜ்லுல் ஹக், ராஜேந்திரகுமார் பங்கேற்றனர்.
தி.மு.க., தெற்கு ஒன்றியம் சார்பில் தோட்டனுாத்து பிரிவில் 60 அடி உயரத்தில் ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை கொடியேற்றினார். துாய்மை பணியாளர்கள், திருநங்கைகள், மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர்கள் என 400க்கு மேற்பட்டோருக்கு ரூ .ஒரு லட்சம் மதிப்பிலான குடை, போர்வை, இனிப்பு சில்வர் பாத்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வத்தலக்குண்டு: பரஸ்பரம் அனாதை சிறுமிகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னதுரை முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் செல்வராஜ் வரவேற்றார். தலைவர் சிதம்பரம், தொகுதி செயலாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் முத்து, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய தலைவர் கோபால், இளைஞர் அணி நிர்வாகி மகாமுனி, ஊராட்சித் தலைவர் ரமேஷ் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, பொருளாளர் சத்தியமூர்த்தி, துணைச் செயலாளர் பிலால்உசேன் முன்னிலை வகித்தனர். காந்திகிராமம் கஸ்துாரிபா மருத்துவமனையில் நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினர். பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டன. சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி பங்கேற்றனர்.
வடமதுரை : நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், கவுன்சிலர்கள் மகேஸ்வரி, விஜயா பங்கேற்றனர்.
வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். மாவட்ட நெ சவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சிவக்குமார் பங்கேற்றனர்.