/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' யில் அனுமதியற்ற விடுதிகள்
/
' கொடை' யில் அனுமதியற்ற விடுதிகள்
ADDED : டிச 03, 2025 07:07 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன.
கொடைக்கானல் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.பயணிகள் இங்கு தங்கி செல்ல ஏதுவாக ஏராளமான விடுதிகள் செயல்படுகின்றன.இதற்கு 10 அரசு துறைகளின் சுய சரிபார்ப்பு சான்றுகள் அவசியமாகும். நாளடைவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் விளைநிலங்களில் அனுமதி பெறாமல் ஏ பிரேம், டூம் ஹவுஸ், வுட் ஹவுஸ் டென்ட் குடில் துவங்கப்பட்டுள்ளத. இவை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படாமல் ஆங்காங்கே இஷ்டம்போல் கட்டமைக்கப்பட்டுள்ளன.இதை கண்காணிக்க வேண்டிய சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, ஊரக, உள்ளாட்சித் துறை, போலீசார் துளியும் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறான தங்கும் விடுதிகள் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் புற்றீசல் போல் பெருகியுள்ளன.இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு போதை பொருட்கள் தாராளமாக சப்ளை செய்வது தான் சிறப்பாகும். இரவில் வனப்பகுதிகளில் டென்ட் அடித்து தங்க வைத்து ஆப் ரோடு சவாரி என அழைத்து செல்லப்படுகின்றனர்.
இவ்வாறாக செயல்படும் விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள், உல்லாசம் அம்சங்கள் தலைவிரித்தாடுகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பயணிகளை ஈர்க்கின்றனர். இதனால் ஒரு காலகட்டத்தில் கொடைக்கானல் நகர் பகுதியில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தற்போது கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள தொலைதூர கிராமங்களையே நாடுகின்றனர். இதற்கு காரணம் போதை , உல்லாசமே மையமாகும்.இதை கண்காணிக்க வேண்டிய துறை ரீதியான போக்கால் பாதுகப்பற்ற சூழல் நிலவுகிறது. முறையாக வரிகளை செலுத்திய விடுதிகள் வருவாய் இழக்கின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதி பெறாத விடுதிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அதை துறை ரீதியான அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சுற்றுலாவை நம்பி உள்ள விடுதிகளை ஆய்வக்குட்படுத்தி முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலா மேம்படும். கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகளிலும் போதை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.

