ADDED : ஜன 15, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல : திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளையின் தலைவர் ரெத்தினம் சார்பில் 200 ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா ரவுண்ட் ரோடு ஜி.எஸ்., ஹாலில் நடந்தது.
முதற்கட்டமாக 100 பேருக்கு திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் சுந்தரராஜன், ஜி.டி.என்., கல்லுாரி தாளாளர் ரெத்தினம், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம்,திருவருட் பேரவை இணைச் செயலர் திபூர்சியஸ் ஆகியோர் இணைந்து வழங்கினர். அறக்கட்டளையை பதிவு செய்து உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கவும், வீடு கட்டும் திட்டத்திற்கு குறைந்த விலையில் மனைகள் ஏற்படுத்தி தரவும் முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் திருப்பதி நன்றி கூறினார்.