UPDATED : நவ 10, 2026 08:17 PM
ADDED : நவ 10, 2026 08:13 PM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே 125 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காவேரியம்மாபட்டி ஊராட்சியில் 125 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து பெண் தொழிலாளர்கள் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் பி.டி.ஓ., தாஹிரா உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை கைவிடப்பட்டது.
