/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் அனுமதியற்ற விடுதிகள்; டி.ஆர்.ஓ., ஆய்வு
/
'கொடை'யில் அனுமதியற்ற விடுதிகள்; டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : ஆக 10, 2025 02:51 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியற்ற தங்கும் விடுதிகள் குறித்து டி.ஆர்.ஓ., ஜெயபாரதி ஆய்வு செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் உள்ள அனுமதியற்ற தங்கும் விடுதிகள் குறித்து நகராட்சி, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சில வாரத்திற்கு முன் அனுமதியற்ற இரு தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டன.
வருவாய்த்துறையினர் அனுமதியற்ற ஏராளமான விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.இதனிடையே டி.ஆர்.ஓ., ஜெயபாரதி கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் ஆய்வு செய்தார். விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டடம் குறித்து நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு, தாசில்தார் பாபு , நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில்,''உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதியற்ற தங்கும் விடுதிகள் பற்றி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 95 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு அருகே அனுமதி பெற்று வணிக நோக்கில் செயல்படும் விடுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் சீல் வைக்கப்படும். நகராட்சியில் 10 மீ., மேல் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்து நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.

