/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பைக்கிடங்கில் மருந்து கழிவுகள் வாகனங்களை சிறைபிடித்த நா.த.க.,
/
குப்பைக்கிடங்கில் மருந்து கழிவுகள் வாகனங்களை சிறைபிடித்த நா.த.க.,
குப்பைக்கிடங்கில் மருந்து கழிவுகள் வாகனங்களை சிறைபிடித்த நா.த.க.,
குப்பைக்கிடங்கில் மருந்து கழிவுகள் வாகனங்களை சிறைபிடித்த நா.த.க.,
ADDED : ஜூலை 13, 2025 12:20 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மருத்துவ கழிவுகள் கொட்டவந்த வாகனங்களை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் - பழநி ரோட்டில் முருகபவனம் அருகே மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. திண்டுக்கல் நகரில் தினமும் சேகரிக்கப்படும் 70 டன் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் இங்கு கொட்டுவதற்கு தடை உள்ளது.
இருந்தபோதும் தடையை மீறி மருத்து,இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாகவும் அதனை தடுக்க கோரியும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10க்கு மேற்பட்டோர் மாநகராட்சி குப்பை கிடங்கின் நுழைவாயில் கதவை பூட்டினர்.
அதிகாரிகள் வராமல் எந்த வாகனமும் குப்பை கிடங்கிற்கு செல்ல கூடாது என கோஷமிட்டபடி வாகனங்களை சிறைபிடித்தனர்.
அவர்கள் கூறியதாவது : குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதற்கு தடை உள்ள நிலையில் அதனை மீறி மருத்துவ கழிவுகள் கொட்டுகின்றனர். தனியார் மருத்துவமனையில் பணம் பெற்றுக்கொண்டு கழிவுகளை கொட்டி செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
மருந்து பாட்டில்கள், ஊசிகள், ஆப்பரேஷன் தியேட்டர் கழிவுகள் ரத்தக்கறையுடன் மூடை, மூடையாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் கூட தனியார் மருத்துவமனை கழிவுகள் உள்ளன என்றனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் நாம்தமிழர் கட்சியினர் கலைந்து சென்றனர்.