ADDED : மே 18, 2025 03:14 AM

வேடசந்துார்: வேடசந்துார் சேனன்கோட்டை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் மே, ஜூன் வெயிலை கருத்தில் கொண்டு பிப்ரவரி, மார்ச்சில் தர்பூசணி நடவு விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தற்போது நன்கு காய்கள் காய்த்து காடெல்லாம் காயாகக் காட்சியளிக்கும் நிலையில் தர்பூசணிக்கு போதிய விலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நன்கு விளைந்த பெரிய காய்களை மட்டுமே வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து சென்ற நிலையில் சுமாரான ,சிறிய காய்களை காட்டோடு வீணாக விட்டு சென்று விட்டனர்.
இதனால் தர்பூசணி பயிரிட்ட தோட்டங்களில் காயாக காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான காய்களை தேடி எடுத்து செல்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஒரு கிலோ ரூ.2 , 3 என குறைந்த விலைக்கு செல்வதால் கையை பிடிக்கும் என்ற நிலையில் சிறிய காய்களை பறிக்காமல் செடியோடு விட்டு உள்ளோம் என்றனர்.