/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுத்திகரிக்கப்படாத குடிநீர்; துார்வாராத சாக்கடை தாண்டிக்குடி ஊராட்சியில் தொடரும் அவலம்
/
சுத்திகரிக்கப்படாத குடிநீர்; துார்வாராத சாக்கடை தாண்டிக்குடி ஊராட்சியில் தொடரும் அவலம்
சுத்திகரிக்கப்படாத குடிநீர்; துார்வாராத சாக்கடை தாண்டிக்குடி ஊராட்சியில் தொடரும் அவலம்
சுத்திகரிக்கப்படாத குடிநீர்; துார்வாராத சாக்கடை தாண்டிக்குடி ஊராட்சியில் தொடரும் அவலம்
ADDED : அக் 30, 2025 04:19 AM

தாண்டிக்குடி: சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளை,துார்வாராத சாக்கடை என பல்வேறு பிரச்னைகளுடன் தாண்டிக்குடி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
அம்பேத்கர் காலனி, இந்திரா நகர்,கூடம் நகர், பட்லங்காடு உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் சேதமடைந்த ரோடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். துார்வாரப்படாத சாக்கடையால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது . சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளையால் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது.ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலால் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் தவியாய் தவக்கின்றனர்.அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அனைவரும் பாதிக்கும் நிலை உள்ளது. மருத்துவமனையில் இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத அவலம் என ஏராளமான பிரச்னைகளும் உள்ளன.
முகம் சுளிக்கும் மக்கள் லட்சுமணன், இயற்கை ஆர்வலர்: தாண்டிக்குடி ஊராட்சியில் 1960 ல் கட்டமைக்கப்பட்ட குடிநீர் திட்டமே தற்போது வரை நடைமுறையில் உள்ளது.ஆற்றில் தடுப்பணை ஏற்படுத்தி ஈர்ப்பு விசை மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இவை சுத்திகரிக்கப்படாமல் நேர டியாக சப்ளை ஆவதால் சுகாதாரக் கேட்டுடன் மக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.தெருக்களில் ஆங்காங்கே குப்பை அள்ளபடாமல் சுகாதார கேடாக உள்ளது. என்.எஸ்.எஸ்., தெருவில் வளர்ச்சி பணிகள் செய்யப்படவில்லை. மருதாநதி ஆற்றோரம் தடுப்புச்சுவர் ஏற்படுத்தாமல் மழையில் வெள்ளம் ரோட்டில் ஆர்ப்பரித்து செல்கிறது. தெரு நாய் பிரச்னையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சமுதாயக்கூடத்தை குடிமகன்கள் பாராக பயன்படுத்துவதால் குடியிருப்போர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
தீர்வு இல்லாத குடிநீர் பிரச்னை கருப்புசாமி, வியாபாரி: ஊராட்சி பகுதியில் உள்ள ரோடுகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டு, குழியுமாக உள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது. சரிவர குடிநீர் சப்ளையாகாதது, குடிநீர் குழாய்கள் பூமிக்கடியில் சேதமடைந்து வீணாவது என குடிநீர் பிரச்னை தீர்க்க முடியாததாக உள்ளது. இதற்கு புதிய குழாய் அமைத்து குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். கரியமால் கோயில் தெருவில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க அளவீடு செய்த நிலையில் இதுவரை அமைக்கவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத நிலை உள்ளது. சாக்கடைகள் சேதமடைந்துள்ளன.
சீர் செய்ய நடவடிக்கை ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,''உள்ளாட்சி பதவிகள் முடிந்த நிலையில் தற்போது தனி அலுவலர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

