sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

2121 ஆக உயர்ந்த ஓட்டுச்சாவடிகள்: கலெக்டர்

/

2121 ஆக உயர்ந்த ஓட்டுச்சாவடிகள்: கலெக்டர்

2121 ஆக உயர்ந்த ஓட்டுச்சாவடிகள்: கலெக்டர்

2121 ஆக உயர்ந்த ஓட்டுச்சாவடிகள்: கலெக்டர்


ADDED : மார் 12, 2024 06:13 AM

Google News

ADDED : மார் 12, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 2119 லிருந்து 2121 ஆக அதிகரித்துள்ளதாக,'' கலெக்டர் பூங்கொடி கூறினார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோனைக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து கூடுதல் ஓட்டுச்சாவடி அமைக்கவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கும் ஓட்டுச்சாவடிக்கும் இடையே உள்ள துாரம் 2 கி.மீட்டருக்கு மேல் இருந்தால கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் தலா ஒரு ஓட்டுச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டு ஆண், பெண் என 2 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2119 லிருந்து 2121 ஆக அதிகரித்துள்ளது.

கட்டடங்கள் உறுதித்தன்மை, பழுதடைந்த கட்டடங்களை கருத்தில்கொண்டு 51 ஓட்டுச்சாவடிகள் வேறு கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

4 ஓட்டுச்சாவடிகளின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், துணை ஆட்சியர்(தேர்தல்) ராஜேஸ்வரி, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருகேஸ்வரி, சரவணன், பால்பாண்டி, மாரி, கங்காதேவி, .கமலக்கண்ணன், ஜெயசித்ரகலா கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us