/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2025 05:57 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்த மறவபட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனு: தாடிக்கொம்பு பகுதி பழனியாண்டி கோனார் குளத்தில் தேக்கப்படும் தண்ணீரை கொண்டு எங்கள் பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வந்தோம்.
தற்போது குளத்தின் வரத்து கால்வாய், குளப்பகுதியை சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி உள்ளனர். குளத்தின் கரைப்பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால் குளத்தின் அருகில் உள்ள தோட்டங்களுக்கு எங்களை போன்ற விவசாயிகள் செல்ல முடியவில்லை.
ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள குளத்தை மீட்டு துார்வாரும் பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுள்ளனர்.

