/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை
/
'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை
'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை
'கொடை' யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை
ADDED : ஏப் 20, 2025 04:41 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தொடர் விடுமுறையடுத்து ஏராளமான பயணிகள் கொடைக்கானல் வருகை தந்தனர்.
ஏரிச்சாலை சந்திப்பு பாம்பார்புரம் சந்திப்பு, கலையரங்கம், செவன் ரோடு, மூஞ்சிக்கல் சந்திப்பு, ஏரிச்சாலை செவன் டீ, வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்தை சரி செய்ய போலீசார் பணியிலிருந்தும் நெரிசல் இரவு வரை நீடித்தது.
கலெக்டர் சரவணன் மாலையில் தற்காலிக பார்க்கிங், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.